உவர் | உப்பச் சுவை உப்பு உவர் மண் கடல் இனிமை |
உவர்ப்பு | உப்புச் சுவை துவர்ப்பு வெறுப்பு |
உவரி | உப்பு நீர் கடல் சிறுநீர் |
உவவு | உவப்பு முழு நிலா அமாவாசை |
உவனகம் | அந்தப்புரம் சிறை மதில்சுவர் அகழி வாயில் இடைச்சேரி பள்ளம் குளம் ஏரி பரந்த வெளியிடம் உப்பளம் பிரிதல் |
உவா | பெளர்ணிமை அமாவாசை கடல் |
உவாமதி | முழுநிலா |
உழக்கு | கலக்கு மிதித்து நசுக்கு பேரளவில் கொன்றழி உழு விளையாடு [உழக்குதல்] இரண்டு ஆழாக்களவு சூதாடு காய்களைப் போட்டு உருட்டும் பெட்டி |
உழப்பு | வருத்தம் துன்பம் முயற்சி பழக்கம் |
உழல் | அசைதல் செய் சுழலு அலைதல் செய் [உழலுதல், உழற்சி] |
உழலை | செக்கு அல்லது கரும்பாலையில் சுழலும் மரம் குறுக்கு மரம் மாட்டின் கழுத்துக் கட்டை |
உழவன் | நிலத்தை உழுபவன் மருத நில வாசிகளில் ஒருவன் ஏர் மாடு விவசாயி |
உழவாரம் | புற்செதுக்கும் கருவி |
உழவு | உழுதல் பயிர்த் தொழில் உடலுழைப்பு |
உழவுசால் | உழுத நிலத்தில் ஏற்படும் வரி |
உழி | இடம் பொழுது ஏழாம் வேற்றுமை உருபு |
உழு | உழுதல் செய் கிளைத்தல் செய் தோண்டுதல் செய் [உழுதல்] |
உழுவலன்பு | ஏழு பிறப்புகளிலும் மாறாது தொடரும் சிறந்த அன்பு |
உழுவை | புலி ஒருவகை மீன் |
உழை | வருந்தி முயற்சி செய் வருந்து வருமானம் பெற வேலை செய் கலைமான் ஆண்மான் அண்மை, பக்கம், இடம், உவர்மண், ஏழிசைகளுள் ஒன்று, கதிரவன் மனைவியர்களில் ஒருத்தி, யாழின் நரம்பு, விடியற்காலம் [உழைத்தல், உழைப்பு] உழையர், உழையவர் - அருகிலுள்ளவர் அமைச்சர் வலர் |