உ - வரிசை 74 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உலமரம் | துன்பம் |
உலவு | உலாவு |
உலறு | நீர் வற்று |
உலா | பவனி வருதல் |
உலாத்து | உலாவு |
உலாவு | அங்குமிங்கு அசை |
உலுக்கு | குலுக்குதல் செய் |
உலுத்தன் | உலோபி |
உலுப்பு | அசைத்து உதிரச் செய் [உலுப்புதல்] |
உலை | அடுப்பு |
உலைவு | நடுக்கம் |
உலோகம் | பேராசை |
உவச்சன் | கோயில் பூசாரி சாதியான் |
உவட்டு | தெவிட்டு |
உவப்பு | மகிழ்ச்சி |
உவமம் | உவமை |
உவமானம் | உபமானம் |
உவமித்தல் | ஒப்பிடுதல் |
உவமை | ஒப்பு |
உவமைத் தொகை | உவகையுருபு தொக்க தொலை (எ.கா - பவளவாய்) |