உ - வரிசை 73 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உயக்கம் | வருத்தம் |
உயவு | வருத்தம் |
உயா | வருத்தம் |
உயிரளபு | தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் உயிரெழுத்து (எ.கா - மகடூஉ) |
உரப்பு | அதட்டு |
உரவு | வலிமை |
உரற்று | பேரொலி செய் |
உரன் | மனவுறுதி |
உரிஞ்சு | உராய் |
உரிபொருள் | (அகம்) ஐந்திணைகளுக்கு உரிய புணர்தல் முதலிய பொருள்களும் அவற்றின் நிமித்தங்களும் |
உரிவை | தோல் |
உருத்திராக்கம் | உருத்திராக்க மரம் |
உருத்திராட்சபூனை | தவசி வேடமணிந்த வஞ்சகன் |
உருமு | பேரொலி செய் |
உருவ | முழுதும் |
உரைதல் | பொன்,வெள்ளிகளின் மாற்று அறிய உரைக்கும் கல் |
உரைசு | தேய்ந்து போ |
உரையாணி | (பொன்) மாற்று அறிய உதவும் ஆணி |
உல்லாபம் | மழலை மொழி |
உலம் | திரண்ட கல் |