உ - வரிசை 72 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உப்பேரி

ஒருவகைக் கறி

உபசருக்கம்

ஒரு சொல்லுக்கு முன் சேர்க்கப்படும் ஓர் இடைச் சொல்

உபசார வழக்கு

ஒன்றின் தன்மையை மற்றொன்றின் மீது ஏற்றிச் சொல்லுவது

உபநயனம்

பூணூல் அணியும் சடங்கு

உபநியாசம்

பிரசங்கம்
சொற்பொழிவு

உபம்

இரண்டு

உபமேயம்

உவமிக்கப்பட்ட பொருள்

உபயகவி

இரு மொழிகளில் கவிபாடும் திறமையுள்ளவன்

உபலக்கணம்

ஒரு மொழி தன்னினத்தையும் குறித்தல்

உபவாசி

உண்ணா நோன்பிரு [உபவாசித்தல், உபவாசம்]
உண்ணா நோன்பிருப்பவன்

உபாக்கியானம்

கிளைக்கதை

உபேட்சி

புறக்கணித்தல் செய் [உபேட்சித்தல், உபேட்சை]

உம்பர்

மேலிடம். மாடத்தும்பர் (ஞானா. 9, 6)
உயர்ச்சி. (திவா.)
ஆகாயம். உம்பருச்சியிற். . . கதிர்பரப்பு கடவுள் (திருவிளை. தண்ணீர். 22)
தேவலோகம். உம்பர்க் கிடந்துண்ண (நாலடி, 37)
தேவர். ஒலிகடல்சூ ழுலகாளமும்பர்தாமே (திவ். பெரியதி, 7, 8, 10)
பார்ப்பார். (W.). அப்புறம். ஆறைங்காத நம் மகனாட் டும்பர் (சிலப். 10, 42.) மேலே. யான்வருந்தி யும்பரிழைத்த நூல்வலயம் (பெரியபு. கோச்செங். 5)
மேலிடம்
உயர்ச்சி
ஆகாயம்
தேவருலகம்
தேவர்
உயரத்தில் மேலே
ஆங்கே

உம்பல்

ஆண் யானை
ஆட்டுக்கடா
யானை
வழித்தோன்றல்
வலிமை
எழுந்து தோன்றுதல்
ஒருவகைத் தேக்குமரம்

உம்மை

உம் என்ற இடைச் சொல்
முற்பிறப்பு
வருபிறப்பு

உமணன்

உப்பு அமைப்பவன்
உப்பு வாணிகன் (பெண்பால் - உமணத்தி, உமட்டி)

உமர்

உம்மவர்
குதிர்

உய்த்துணர்வு

ஆராய்ந்துணரும் அறிவு
ஞானம்

உய்தி

துன்பத்தினின்று விடுபடல்
பரிகாரம்

உய்யானம்

நந்தவனம்
சோலை