உ - வரிசை 71 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உண்டாட்டு | கள்ளுண்டு களித்தல் |
உண்ணாமுலை | திருவண்ணாமலைக் கோயிலில் வழிபடப்படும் பார்வதி தேவி |
உணக்கம் | வாட்டம் |
உணங்கல் | உலர்தல் |
உணராமை | அறியாமை |
உத்தண்டம் | உக்கிரம் |
உத்தாரணம் | எடுத்து நிறுத்தல் |
உத்தியானம் | மலர்ச் சோலை, அரசர் விளையாடுங் காவற் சோலை |
உதகம் | நீர் பூமி |
உததி | கடல் |
உதாசினம் | நித்தை |
உதாரம் | கொடைக்குணம் |
உதானன் | உடம்பிலுள்ள பத்து வாயுக்களில் ஒன்று |
உதும்பரம் | எருக்கு |
உதைகால் | தாங்கும் முட்டுக்கால் |
உதைகாலி | உதைக்கும் இயல்புள்ள பசு |
உப்பங்காற்று | கடற்காற்று |
உப்பிலி | உப்பில்லாதது |
உப்புச் சுமத்தல் | ஒரு விளையாட்டில் வென்றவனைத் தோற்றவன் சுமத்தல் |
உப்பெடுத்தல் | திருமணம் பேசுவதற்குச் செல்லும்பொழுது உப்பெடுத்துச் செல்லும் ஒரு சடங்கு |