உ - வரிசை 70 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உத்தியோகப்பூர்வ | முறையான |
உசத்தி | உயர்வு : மேலானது. |
உச்சாடணம் | மந்திரம் ஓதுதல். |
உடைப்பில் போடு | தூக்கி எறிதல் : தேவையற்ற தென்று ஒதுக்குதல். |
உண்டாய் இருத்தல் | கருவுற்றிருத்தல். |
உபாத்தியார் | கல்வி கற்பிக்கும் ஆசிரியர். |
உருட்டுப் புரட்டு | முறையற்ற செய்கை. |
உருத்திராட்சப் பூனை | சாதுபோல தோற்றம் கொண்ட தீயவன். |
உவணம் | கருடன் |
உணர்ச்சி | நம் தோலினை தொடும் போது உணரப்படும் உடல் உணர்வு, நம் மனதில் உணரப்படும் அறிவற்ற உணர்வு. |
உலோபி | பேராசையுள்ளவன் |
உணவகம் | உணவு வசதியுடைய இல்லம் |
உலைக்களம் | கொல்லருலைக் கூடம் |
உடலுநர் | பகைவர் |
உடற்சி | சினம் |
உடற்று | சினமூட்டு |
உடன்படுத்து | இணங்கச் செய் |
உடன்போக்கு | (அகம்) பெற்றோர் அறியாம்ல தலைவனுடன் தலைவி செல்லுதல் |
உடுபதி | மதி |
உடையவர் | சுவாமி |