உ - வரிசை 69 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உன்னாகம்

காடி.

உன்னாயம்

உயர்வு.

உன்னாலயம்

இதயம்.

உத்தியோகபூர்வ

அரசமுறை

உபத்ரவம்

ஊறு
தொந்தரவு

உற்சவம்

விழா

உற்சாகம்

விறுவிறுப்பு,ஊக்கம்

உஷார்

எச்சரிக்கை
விழிப்பு

உவகை

சுகமாக நேரத்தைக் கழித்தல்
கேளிக்கை
உள்ளக் களிப்பு
மகிழ்ச்சி
அன்பு
காமம்
காதல் சுவை

உடலக்கண்ணன்

இந்திரன்

உண்மேதை

உள்ளறிவுடையவன், மெய்ஞ்ஞானி

உதயசூரியன்

மாற்றத்தின் மற்றும் வளர்ச்சியின் அறிகுறி

உதயணன்

என்று வளர்பவன்

உதாத்தன்

சிறந்தவன், வள்ளல்

உதாரன்

கொடையாளி, பேச்சுத்திறமையுள்ளவன்

உத்தியுத்தன்

ஊக்கமுள்ளவன், அருவுருவத்திருமேனி கொண்டவன்

உந்தியிறைவன்

நான்முகன்

உமாபதி

சிவபெருமான்

உரவன்

அறிவுடையோன், பலமுடையவன்

உரேந்திரன்

வீரன்