உ - வரிசை 68 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உற்சாயம் | உற்சாகம். |
உற்சாரகன் | கடைகாப்போன். |
உற்சுகம் | இச்சித்தல். |
உற்சேபணம் | கால்செய்வட்டம். |
உற்பத்திக்கிரமம் | பிறப்புவகை, வங்கிஷ அட்டவணை. |
உற்பலவனம் | நடந்தது. |
உற்பாடனம் | கக்கல், நிருமூடம். |
உற்பாதகம் | எண்காற்புள். |
உற்பிராசனம் | நிந்தை. |
உற்பின்னம் | பிளவுபடுதல். |
உற்றபண்புரைப்போர் | தூதர். |
உற்றிடம் | அடைக்கலம், ஆபத்து உற்றசமயம். |
உற்றுக்கேட்டல் | கவனமாய்க் கேட்குதல். |
உனத்தரு | குறிஞ்சா. |
உன்மத்தி | குறிஞ்சா. |
உன்மந்தம் | கொலை. |
உன்மார்க்கம் | துன்னடை. |
உன்மேதை | கொழுப்பு. |
உன்மை | தசைபிடுங்குங்குறடு. |
உன்னமனம் | எழுச்சி. |