உ - வரிசை 67 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உறுதிப்பத்திரம் | எழுத்துறுதி. |
உறுதிப்பாடு | திடம். |
உறுந்தறுவாய் | தற்சமயம். |
உறுப்படக்கி | ஆமை. |
உறுப்புமயக்கம் | உறுப்புக்குறை எட்டினொன்று. |
உறுமுதல் | உறுமல். |
உறைத்துளி | மழைத்துளி. |
உறைந்தமழை | கட்டியானமழை. |
உறையிடம் | இருப்பிடம், உள்வீடு,தங்குமிடம். |
உறையூர் முதுகூற்றனார் | கடைச்சங்பக் புலவர்களு ளொருவர் . |
உறையூர்வல்லி | உறையூரிற் கோயில்கொண்ட இலக்குமி. |
உற்கணம் | தட்டை. |
உற்கண்டிதம் | துக்கப்படல். |
உற்கருடம் | அதிசயம். |
உற்கன் | சயன்மகன். |
உற்காரசூலை | ஒருநோய். |
உற்கிரமணம் | போதல். |
உற்கோசகன் | பரிதானம்வாங்கி. |
உற்சர்க்கத்தலம் | மூலாதாரம். |
உற்சற்சனம் | நன்கொடை. |