உ - வரிசை 66 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உள்ளுக்குள்

உள்ளே.

உள்ளுயிர்

கடவுள்.

உள்ளுயிர்க்குன்று

நத்தை.

உள்ளுருக்கி

ஒருவகைநோய்.

உள்ளே

உள்ளாக.

உள்ளொடுக்கம்

மனவொடுக்கம்.

உறட்டலன்

வறண்டவன்.

உறட்டற்களி

வறட்களி.

உறண்டற்களி

வறட்களி.

உரண்டையாடல்

அலைக்கழிவு செய்யல்.

உறந்தை

உறையூர்.

உறவர்

உறவோர்.

உறவின்முறையார்

உறவர்.

உறவுகூடுதல்

சிநேகங்கூடல்.

உறவுகொண்டாடல்

உறவாடல், உறவுபாராட்டல்.

உறவுமுறையார்

உறவின்முறையார்.

உறழ்தலுவமை

ஓரலங்காரம்.

உறுசூது

வஞ்சகம்.

உறுதிச்சுற்றம்

உற்றதுணைவர்.

உறுதிபயத்தல்

நயன்றரல்.