உ - வரிசை 65 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உள்ளக்குறிப்பு | உட்கருத்து,மனக்குறிப்பு. |
உள்ளக்குறை | மனக்குறை. |
உள்ளங்கால் | உட்கால் |
உள்ளடக்கல் | அமசடக்கம். |
உள்ளடியார் | உறவர். |
உள்ளதுசிறத்தல் | களிப்பு. |
உள்ளத்துறைவோன் | கடவுள். |
உள்ளநாள் | ஆயுள்நாள். |
உள்ளப்படிறு | மனவஞ்சம். |
உள்ளமிகுதி | ஊக்கம். |
உள்ளமை | உடைமை, உண்மை. |
உள்ளாடல் | உள்ளாடுதல். |
உள்ளாடுதல் | உடந்தையாதல், உட்சேரல். |
உள்ளாந்தரங்கம் | மிகுந்த அந்தரங்கம். |
உள்ளானம் | உள்ளாளனம். |
உள்ளிடை | உட்காரியம். |
உள்ளிட்டது | உள்ளடங்கியது. |
உள்ளிட்டார் | கூட்டாளிகள், பங்காளிகள். |
உள்ளின்மாசு | மனமாசு. |
உள்ளீடு | உட்படுகை |