உ - வரிசை 64 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உழுபடைச்சால்

சீதை.

உழுவளைப்பு

தொழுப்பு.

உளதம்

கேட்டல்.

உளப்படுத்தல்

உறழச்செய்தல்.

உளப்பாடு

இக்கம், உட்படுகை.

உளறுவாயன்

விடாதுபேசுவோன்.

உளுக்கல்

உளுக்குதல்.

உளுப்பு

உளுத்தல்.

உளைக்கால்

உரோமக்கால்.

உளைமாந்தை

கடுநோய்.

உள்யோசனை

உள்ளுக்குள்ளான யோசனை.

உள்வணக்கம்

மனவணக்கம்.

உள்வயிரம்

அகவயிரம், மனவயிரம்.

உள்வலிப்பு

ஒருநோய்.

உள்வழிகடந்தோன்

கடவுள்.

உள்வளைவு

உட்கவிவு.

உள்வினை

உட்கள்ளம், உட்பகை.

உள்வீச்சுச்சன்னி

ஒருவகைநோய்.

உள்வெக்கை

ஒருநோய்.

உள்ளக்களிப்பு

மனமகிழ்ச்சி.