உ - வரிசை 61 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உலோகார்த்தம் | இலௌகீகநயம், உலகநன்மை. |
உலோகிதகம் | கெம்புக்கல். |
உலோகிதசந்தனம் | குங்குமப்பூ. |
உலோகிதாங்கம் | செவ்வாய். |
உலோகேசன் | கடவுள். |
உலோகோத்தமம் | பொன். |
உலோசமஸ்தகம் | ஓமம். |
உலோஷ்டபேதனம் | மண்கட்டி யுடைக்குந்தடி. |
உலோஷ்டகம் | மண்கட்டி. |
உலோஷ்டு | மண்கட்டி. |
உலோபன் | பிசுனன் |
உலோபாமுத்திரை | அகத்தியன்மனைவி. |
உலோமசம் | சடமாஞ்சில். |
உலோமசன் | ஒருமஹரிஷி. |
உலோலம்பம் | வண்டு. |
உலோலை | இலக்குமி, நா. |
உலௌகீகம் | இலௌகீகம். |
உல்லாகசனம் | புளகப்பொடிப்பு. |
உல்லாசக்காரன் | உல்லாசன். |
உல்லாடி | மெல்லிய ஆள். |