உ - வரிசை 60 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உலைங்குதல்

கீழ்ப்படுதல்.

உலைத்தண்ணீர்

உலைநீர்.

உலைமுகம்

கம்மாளனுலைமுகம்.

உலையாணிக்கோல்

உலையிருப்புக்கோல், சூட்டுக்கோல்.

உலைவைத்தல்

உலைமூட்டல்.

உலொடலொட்டைப்பேச்சு

பிரயோசனமில்லாத பேச்சு.

உலொட்டை

சொட்டைப்பேச்சு.

உலோககாந்தம்

காந்தம்.

உலோகக்காரன்

கொல்லன்.

உலோகக்கட்டி

பஞ்சலோகத்தை யுருக்கிக்கூட்டிய கட்டி.

உலோகசனனி

இலக்குமி.

உலோகபாந்தவன்

சூரியன்.

உலோகபாலன்

இராசா.

உலோகமணல்

இருப்புமணல்.

உலோகமாதா

இலக்குமி.

உலோகராட்டு

கடவுள்.

உலோகரூடம்

தேசவழக்கம்.

உலோகவிருஷ்டம்

கழுகு, பருந்து.

உலோகவேடணை

மண்னிச்சை.

உலோகாயதம்

உலகாயதமதம்.