உ - வரிசை 6 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உடும்புப்பிடி

(குழந்தை குப்புறப் படுத்த நிலையில் முதன்முதலாக)தலையைத் தூக்கிப் பார்த்தல்

உடும்புப் பிடியாக

விடாப்பிடியாக,உறுதியாக

உடுமண்டலம்

நட்சத்திரங்களும் கிரகங்களும் அடங்கிய தொகுப்பு

உடை

ஆடை
துண்டாதல்
முருக்கவிழ்
மலர்தல் செய்
வெளிப்படுத்து
அழித்தல் செய்
வருத்து [உடைதல், உடைத்தல்]
செல்வம்
வேலமரம்
சூரியனின் மனைவியான உசை
தகர்

உடைசல்

(பயனற்ற)உடைந்துபோன பொருள்

உடைப்பு

(பூட்டு போன்றவற்றை) திறப்பதற்காக பிளத்தல்
(கரை,வரப்பு,குழாய் போன்றவை)தகர்ந்து போகும் அல்லது உடைந்து போகும் நிலை

உடைப்பெடு

வெள்ளத்தின் காரணமாக கரை தகர்ந்து போதல்

உடைபடு

(ஒன்று) உடைந்துபோதல்,துண்டாதல்,பிளத்தல்

உடைமை

(ஒருவருக்கு) உரிமை உடைய வீடு நிலம்,பொருள்கள் போன்ற சொத்து
உடையராம் தன்மை
உடைமைப் பொருள்; செல்வம்

உடைய

(குறிப்பிடப்படும் தன்மை,குணம் ,பண்பு முதலியவை)கொண்ட,உள்ள (குறிப்பிடப்பட்டவருக்கு)'சொந்தமான','உரிய' என்ற பொருளில் பெயர்ச்சொல்லோடு இணைந்து வரும் இடைச்சொல்

உடைவாள்

உடையில் செருகி வைத்திருக்கும் வாள்

உண்

(உணவு) சாப்பிடுதல்
புசித்தல் செய்
விழுங்கு
உட்கொள்
அனுபவி
பொருந்தியிரு
ஒத்திரு
கவர்தல் செய்
செயப்பாட்டு வினை உணர்த்தும் துணைவினை (எ.கா - மிதியுண்டான்) [உண்ணுதல்]

உண்டாக்கு

படைத்தல்,தோற்றுவித்தல்
(ஒன்றை)உற்பத்தி செய்தல்
விளைவி [உண்டாக்குதல்]

உண்டாகு

தோன்றுதல்
உருவாதல்

உண்டான

உரிய

உண்டி

உணவு
உண்டியல்
இரை
பண்மாற்றுச் சீட்டு

உண்டியல்

(பணம், காணிக்கை ஆகியவற்றைப் போடுவதற்குப் பயன்படும்)மேற்புறத்தில் நீளவாக்கில் திறப்பு உடைய பெட்டி போன்ற சாதனம்
கல்லா பெட்டி

உண்டிவில்

1.கவையின் இரு நுனிகளிலும் கட்டப்பட்ட ரப்பர் பட்டையின் நடுவில் சிறிய கல்லை வைத்து இழுத்து விடும்போது குறியை நோக்கிச் சென்று தாக்கப் பயன்படும் சாதனம் 2.கவண்

உண்டு

திணை ,பால் வேறுபாடு இல்லாமல் பயன்படுத்தப்படுவதும் , 'ஓரிடத்தில் வந்தமைதல்', 'உடையதாக இருத்தல்' என்னும் பொருளில் வருவதுமாகிய ஒரு வினைமுற்று
உளதாம் தன்மையை உணர்த்தும் ஒரு வினைமுற்று; ஓர் உவம உருபு

உண்டுபண்ணு

(குறிப்பிட்ட நிலை,தன்மை,போன்றவற்றை)உண்டாக்குதல்