உ - வரிசை 58 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உலகநாதன்

அரசன், கடவுள்,பிரமன்.

உலகநேத்திரன்

சூரியன்.

உலகபாந்தவன்

சூரியன், விட்டுணு.

உலகமலையாமை

நூலழகினொன்று.

உலகமீன்றாள்

பார்ப்பதி.

உலகமுண்டோன்

விட்டுணு.

உலகரட்சகன்

உலகத்தைக் காப்போன்.

உலகர்

உலகத்தார்.

உலகவாஞ்சை

உலகவிருப்பம்.

உலகளந்தோன்

விட்டுணு.

உலகாசாரம்

உலகவொழுக்கம்.

உலகாள்வோன்

உலகாதிபன்.

உலக்கைக்கொழுந்து

முசலகிலசம்.

உலக்கைசார்த்தல்

கெடுத்தல்.

உலக்கைத்திங்கள்

ஆவணிமாதம்.

உலக்கைப்பாட்டு

வள்ளைப்பாட்டு.

உலக்கைப்பிடங்கு

உலக்கைக் கணை.

உலக்கையாணி

பூட்டினவொணி.

உலங்காரணை

அவிரி.

உலத்திசூலை

ஒவிதச்சூலை.