உ - வரிசை 52 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உரரீகிருதம் | அங்கீகரிக்கப்பட்டது. |
உரவல் | உலாவல். |
உரனுறுதல் | பலனடைதல். |
உராதரம் | முலை. |
உராய்ஞ்சல் | உரைதல். |
உரிகை | தீஞ்சுவை. |
உரிமைகொண்டாடல் | உரிமை பாராட்டல். |
உரிமைக்கட்டு | இனக்கட்டுப்பாடு. |
உரிமைக்காணி | உரிமை வழியிற்காணி. |
உரிமைச்சொல் | உரித்துக்கொண்டபேச்சு. |
உரிமைபாராட்டுதல் | உரித்துக்கொண்டாடல், சம்பந்தங்கொண்டாடல். |
உரிமைபேசல் | உரிமைகாட்டிப் பேசல். |
உரிமைப்பாடு | உரித்து. |
உரிமையாட்சி | உரிமையால் வந்த ஆட்சி. |
உரிமையாளி | சொந்தக்காரன். |
உரிமையின்மை | சொந்தமற்றது. |
உரியர் | உரியோர். |
உரியன் | உரியவன். |
உரியாழாக்கு | அரையேஅரைக்கால்படி. |
உரியோன் | கணவன், சுதந்தரி. |