உ - வரிசை 50 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உம்மை யெஞ்சணி | ஒரலங்காரம். |
உயக்குநரகு | பாழ்நரகு. |
உயர்தினர்சுபநாள் | திருவிழா. |
உயர்விழிப்புகழ்ச்சியுவமை | ஓரலங்காரம். |
உயாவல் | சாவல். |
உயிரொழிதல் | சாதல். |
உயிரொழித்தல் | கொல்லல். |
உயிர்குடித்தல் | கொல்லல். |
உயிர்கொள்ளல் | உயிர்வாங்கல். |
உயிர்க்கட்டை | உடம்பு. |
உயிர்க்கணம் | உயிரெழுத்துகள். |
உயிர்க்கருணேசம் | இச்சாசத்தி. |
உயிர்க்கொலை | சீவவதை. |
உயிர்தருமருந்து | மிருதசஞ்சீவினி. |
உயிர்த்தறுவாய் | பிராணாவத்தை. |
உயிர்த்தொடர்க்குற்றுகரம் | ஒரு குற்றுகரம். |
உயிர்த்தோழி | உயிர்ப்பாங்கி. |
உயிர்ப்பன | சுவாசமுடையன. |
உயிர்ப்பாங்கி | தன்னைவிட்டு நீங்காதசினேகி. |
உயிர்ப்பிராணி | சீவனுள்ளது. |