உ - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உடன்படு | இணங்குதல் |
உடன்பாடு | 1.(பிறருடைய கருத்து செயல் முதலியவற்றை) ஏற்றுக்கொள்ளும் இணக்கம்,சம்மதம் 2.உடன்படிக்கை,ஒப்பந்தம் 3.கூற்றின் மறுப்பு இல்லாத தன்மையை விவரிப்பது |
உடன்பிறந்த | 1.ஒரே தாய்க்குப் பிறந்த,கூடப் பிறந்த 2.(பிறந்ததிலிருந்தே ஒருவரிடம்)இயல்பாகக் காணப்படும்/(ஒருவரால் எளிதில் )விட்டுவிட முடியாத |
உடன்பிறந்தார் | உடன்பிறந்தோர் |
உடன்பிறந்தாள் | சகோதரி |
உடன்பிறந்தான் | சகோதரன் |
உடன்பிறப்பு | உடன்பிறந்த சகோதரி அல்லது சகோதரன் |
உடனடி | தற்போது மிக அவசியமான |
உடனடியாக | சிறிது நேரம்கூடக் காத்திராமல், தாமதம் சிறிதும் இல்லாமல் |
உடனடியான | தற்போது மிக அவசியமான |
உடனிகழ்வு | உடனிகழ்ச்சி, ஒரு நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் நிகழும் மற்றொரு நிகழ்ச்சி |
உடனுக்குடன் | ஒரு செயல் நிகல்ந்ததுமே அதற்குத் தொடர்பான செயல்பாடுகளைச் சற்றும் தாமதிக்காமல், உடனடியாக |
உடனே | (செயல் நடந்த)நிமிடமே |
உடு | கட்டுதல் |
உடுக்கு | மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்ட வடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு (இசைக்) கருவி |
உடுக்குறி | (ஏதேனும் ஒரு குறிப்புக்காக எழுத்து ,சொல் முதலியவற்றுக்கு மேல் இடப்படும்)நட்சத்திர வடிவக் குறியீடு |
உடுக்கை | உடுக்கு,மெல்லிய தோலை இழுத்துக் கட்டிய வட்ட வடிவப் பக்கங்களும் ஒடுங்கிய நடுப்பகுதியும் கொண்ட ஒரு (இசைக்) கருவி(ஒரு சிறு பறை) |
உடுத்து | (பொதுவாக ஆடை)அணிதல், (குறிப்பாக புடவை,வேட்டி முதலியன) கட்டுதல் |
உடுப்பு | ஆடை |
உடும்பு | (தான் ஊர்ந்து செல்லும் பரப்பை மிகவும் உறுதியாகப் பற்றிக்கொள்வதாக நம்பப்படும்) ஊர்வன இனத்தைச் சேர்ந்த பிராணி |