உ - வரிசை 49 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உப்பூரணி | உவர்பூமி. |
உமதகி | சணல். |
உமரிக்காசு | தூரி. |
உமா | குன்றி. |
உமாகட்கம் | தருப்பை. |
உமாகுரு | இமையம். |
உமாக்குருவி | உமாபட்சி. |
உமாசகிதன் | சிவன். |
உமபட்சி | ஒருபுள். |
உமிக்காந்தல் | உமியெரிந்தூள். |
உமிக்கிரங்கு | சிறுசிரங்கு. |
உமித்தவிடு | சுணைந்தவிடு. |
உமிநகம் | மிகமெல்லியநகம். |
உமிநீர் | வாய்நீர். |
உமியல் | வசம்பு. |
உமியுண்ணி | ஒருவதையுண்ணி. |
உமேசன் | சிவன். |
உமைகரநதி | கங்கை. |
உமையவள் | பார்வதி. |
உம்பருலகு | தேவலோகம். |