உ - வரிசை 47 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உபயவோசை | ஈரடுக்கொலி. |
உபயாங்கன் | சதாசிவன். |
உபயாமம் | கலியாணம். |
உபரட்சணன் | கடைகாப்போன். |
உபராசிதம் | சிற்றகத்தி. |
உபராவம் | ஒளி. |
உபரியாவி | கோஷ்டம். |
உபரோதகம் | உள்ளறை. |
உபலப்தி | புத்தி. |
உபலாலிகை | தாகம். |
உபற்பவம் | இராகு, கிரகணம். |
உபன்னியாசகம் | பிரசங்கம். |
உபன்னியாசகன் | பிரசங்கஞ் செய்பவன். |
உபன்னியாசி | பிரசங்கஞ்செய்வோன். |
உபன்னியாசித்தல் | பிரசங்கஞ்செய்தல். |
உபாகரணம் | ஆயத்தக்கிரிகை. |
உபாகிதம் | உற்கை. |
உபாகிருதம் | உத்பாதம், பலி. |
உபாசிதம் | வணக்கம். |
உபாசிப்பு | ஆசரணை, வழிபாடு. |