உ - வரிசை 40 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உதிரவாயு | சூதகவாயு. |
உதிரவீரியன் | ஒருவகைப்பாம்பு. |
உதிரவேங்கை | ஒருவேங்கைமரம். |
உதிரித்தழும்பு | அம்மைவடு. |
உதிர்காய் | சொரிநாய். |
உதிர்காலம் | இலையுதிர்காலம். |
உதிர்க்குகிடாரி | கருடன்கிழங்கு. |
உதிர்ப்பு | உகுக்கை, உதிர்வு. |
உதிர்வு | உகுகை, உதிர்கை. |
உதீசம் | குறுவோர். |
உதீசி | வடக்கு. |
உதீசீனம் | வடக்கிலுண்டானவஸ்து. |
உதூகலம் | உரல். |
உதைகாற்பசு | உதறுகாற்பசு. |
உதைசுவர் | அணைசுவர் |
உதைமானம் | உதைகால். |
உதையுண்ணல் | உதைபடல். |
உதோன்முகம் | மேன்முகம். |
உத்கடம் | இலவங்கம், மேலிட்டது. |
உத்கிரகம் | காரல். |