உ - வரிசை 4 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உடந்தை | (குற்றத்துக்கு அல்லது தீய செயலுக்கு) துணை |
உடம்படுமெய் | உயிரில் முடியும் சொல் உயிரில் துவங்கும் சொல்லோடு இணைக்கப்படும்போது அந்த இரு உயிரெழுத்துகளையும் சேர்க்கும் முறையில் இடையில் தோன்றும் ('ய்' அல்லது 'வ்' என்னும்) மெய்யெழுத்து |
உடம்பு | (பெரும்பாலும்) மனித உடல் |
உடம்புக்கு முடியாமல் | உடல் நலம் சரியில்லாமல் |
உடமை | உடைமை, (ஒருவருக்கு) உரிமை உடைய வீடு,நிலம், பொருள்கள் போன்ற சொத்து |
உடல் | (மனிதனின் அல்லது விலங்கின்)முழு உருவம் |
உடல் ஊனமுற்ற | (பிறப்பிலிருந்தே அல்லது விபத்தினால்)அங்க அமைப்பில் குறைபாடு உடைய |
உடல்நலம் | உடல் நோயற்று இருக்கும் நிலை,ஆரோக்கியம் |
உடல்நிலை | உடம்பின் (ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற) நிலைமை |
உடல் பொருள் ஆவி | அர்ப்பணிப்போடு கூடிய உழைப்பும் உடைமைகளும் |
உடல்மொழி | (பேச்சின் மூலம் வெளிப்படுத்துவதோடு)ஒருவரின் உணர்வுகளையும் ஆளுமையையும் வெளிப்படுத்துவதாக அமையும் உடல் அசைவுகளும் இருப்பு நிலையும் |
உடலுழைப்பு | உடலை வருத்திச் செய்யும் கடின உழைப்பு |
உடலுறவு | (மனிதர்களில்)பாலுணர்வின் உந்துதலினால் (பெரும்பாலும்)ஆணும் பெண்ணும் இனப்பெருக்க உறுப்புகளால் கொள்ளும் தொடர்பு,புணர்ச்சி |
உடற்கல்வி | விளையாட்டு,பயிற்சி முதலியவற்றின் மூலம் அளிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கான கல்வி |
உடற்கூற்றியல் | உடல் உறுப்புகளின் உள்ளமைப்பை விவரிக்கும் அறிவியல் துறை |
உடற்பயிற்சி | உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்வதற்காக மேற்கொள்ளும் பயிற்சி |
உடற்பயிற்சிக்கூடம் | உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற வகையில் நவீன சாதனங்கள் நிறைந்த கூடம் |
உடன் | 'குறிப்பிடப்பட்டுள்ளதோடு' என்னும் பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல் |
உடன்கட்டை ஏறு | (முற்காலத்தில்)கணவரின் எரியும் சிதையில் மனைவி விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளுதல் |
உடன்படிக்கை | இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்துகொள்ளும் ஒப்பந்தம் |