உ - வரிசை 37 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உணர்த்தி | அறிவு, உணர்ச்சி. |
உணர்ந்தோர் | அறிவுடையோர். |
உணர்வுகேடு | அறிவுகேடு, சுவரணைகேடு. |
உணர்வோர் | அறிவுடையோர். |
உண்டாதல் | உண்டாக்குதல். |
உண்டாத்தா | கள்ளிமரம். |
உண்டிகைச்சீட்டு | உண்டிப்பத்திரம். |
உண்டிச்சீட்டு | உண்டியற்சீட்டு. |
உண்டியற்சீட்டு | உண்டிப்பத்திரம். |
உண்டில்லாதது | கோள், தேவையானது. |
உண்ணாக்கு | அண்ணத்திலிருந்து தொங்கும் சிறு நாக்கு(மேல்நாக்கு) |
உண்ணாட்டம் | உண்ணோக்கம். |
உண்ணீர் | குடிக்குநீர். |
உண்மிடறு | அணல். |
உண்முடிச்சு | உட்கள்ளம். |
உண்மைத்தவறு | தப்பிதம். |
உண்மைத்தாழ்ச்சி | உண்மைக்குறைவு. |
உண்மைத்தாற்பரியம் | யதார்த்தமானகருத்து. |
உண்மைத்துரோகம் | நம்பிக்கைத் துரோகம், பொய். |
உண்மைப்பாதகம் | உண்மைத் துரோகம். |