உ - வரிசை 36 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உட்சங்கம்

அகச்சங்கம்.

உட்சாடை

உட்கருத்து, குழுஉக்குறி.

உட்செல்லல்

உட்போதல்.

உட்டணகாரகன்

சூரியன்.

உட்டணசஞ்சீவி

நீர்,பிரண்டைகொடி.

உட்டணவாயு

உட்டணங்கண்டு உடலிற் கிளரும்வாயு.

உட்டணாசகம்

குளிர்காலம்.

உட்டணாதிக்கம்

அதிகவுட்டணம்.

உட்டணோதகம்

வெந்நீர்.

உட்டணோபகமம்

வேனிற்காலம்.

உட்டிணீடம்

தலைப்பாகை, மூடி.

உஷ்ணாதிக்கம்

அதிகவெப்பம்.

உஷ்ணோதகம்

வெந்நீர்.

உட்படல்

உட்படுதல்.

உட்பந்தி

அகப்பந்தி.

உட்பற்று

அகப்பற்று.

உட்பிரவேசம்

உட்செல்லுகை.

உட்பிரவேசித்தல்

உட்படுதல், உட்புகல்.

உணக்குதல்

உரைக்கல்.

உணரல்

உணருதல்.