உ - வரிசை 35 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உடுத்துதல் | ஆடை அணிதல். |
உடுநீர் | அகழ். |
உடுபதம் | ஆகாயம். |
உடுபன் | சந்திரன். |
உடுபாதகம் | பனை. |
உடுபுடவை | சாதாரண உடை. |
உடுப்பகை | சூரியன். |
உடும்புநாக்கன் | பொய்யன். |
உடையான் | உடையவன்; பொருளுடையவன் |
உடைவேல் | குடைவேல். |
உட்களவு | உள்வஞ்சகம். |
உட்காங்கை | உட்சூடு. |
உட்காத்தல் | இருத்தல். |
உட்குத்துப்புறவீச்சு | இசிவுஉண்டாகிறகுலையைப்பற்றிய ஒருநோய். |
உட்குயிர் | உள்ளுயிர். |
உட்குறிப்பு | மனக்குறிப்பு. |
உட்குற்றம் | ஒருவகை இசிவுநோய் |
உட்கூதிர் | உட்குளிர். |
உட்கைச்சுற்று | இடக்கைச்சுற்று. |
உட்கோள் | உட்கருத்து, கோட்பாடு. |