உ - வரிசை 34 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உடல்வேலை | பருவேலை. |
உடற்கூறு | உடலினிலக்கணம், உடலின் சுபாவம். |
உடற்கூற்றுத்தத்துவம் | சரீரத்தினிலக்கணநூல். |
உடற்றழும்பு | உடன்மறு. |
உடற்றுதல் | உடற்றல். |
உடனிகழ்ச்சியணி | ஓரலங்காரம், அதுபுணர்நிலை. |
உடனுக்குடனே | உடனைக்குடனே |
உடனொத்தபங்காளி | சரிப்பங்குடையவன். |
உடன் கூட்டு | ஒன்றுகூட்டு. |
உடன்கை | உடனே. |
உடன்பங்காளி | கூடியபங்குக்காரன். |
உடன்பங்கு | கூட்டுபங்கு, சரிப்பங்கு. |
உடன்படுமெய் | உடம்படுமெய். |
உடன்படுவிடை | உடன்படல்விடை. |
உடன்படுவிலக்கு | ஓரலங்காரம். |
உடன்பாட்டுவினை | விதிவினை. |
உடன்பிடிக்கை | உடன்படிக்கை. |
உடுகாட்டி | பொன்னாங்காணி. |
உடுகூறை | ஸ்திரீகள் ஆடை. |
உடுண்டுகம் | வாகைமரம். |