உ - வரிசை 33 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உச்சியோகன்

கனவான்.

உச்சிராயம்

உயரம்.

உச்சிவேர்

மூலவேர்.

உச்சினிமாகாளி

உச்சினி, ஓர்காளி.

உச்சின்னம்

சமப்படுதல்.

உச்சுவலம்

ஆசை, பொன்.

உச்சூனம்

கொழுப்பு.

உஷ்டரகம்

ஒட்டகம்.

உஞற்றல்

உஞற்றுதல்.

உடசத்தோல்

குடசபாலைப் பட்டை.

உடம்படல்

சம்மதப்படல்.

உடம்படுதல்

சம்மதப்படுதல்.

உடம்பாடு

ஒருமிப்பு, சம்மதம்.

உடம்பிடிக்கை

உடம்படிக்கை.

உடலிரண் டுயிரொன்று

கிளிஞ்சல்,சிநேகம்.

உடலிலான்

காமன்.

உடலுதல்

உடல்.

உடலுருக்கி

ஒருவகைநோய்.

உடலெழுத்து

மெய்யெழுத்து.

உடல்வாசகம்

நெட்டெழுத்துவாசகம்.