உ - வரிசை 30 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உள்ள

இருக்கிற. அங்கே உள்ள மனிதன்.
உண்மையான. உள்ள சமாசாரம் இது.

உறு

மிக்க. உறு. மிகுதிசெய்யும்பொருள் (தொல். சொல். 301).

உள்ளபடி

உண்மை. உள்ளபடி சொல்லவா (தனிப்பா.)
உண்மையாக. உள்ளபடி யாமூர் முதலி...இங்கிருக்க (தனிப்பா. i, 60, 119).
தக்கவளவு. அவனுக்கு உள்ளபடி கிடைக்கும்.

உகசந்தி

உகத்தின் சந்திப்பு.

உகசூரியர்

பன்னிருசூரியர்.

உகட்டல்

உகட்டுதல்.

உகந்தசெய்தி

நல்லசமாச்சாரம்.

உகப்பிரளயம்

யுகமுடிவு.

உகமாருதம்

ஊழிக்காற்று.

உகரக்குறுக்கம்

குற்றியலுகரம்.

உகவல்லி

நாகமல்லி.

உகளுதல்

உகளல்.

உகாரம்

உகரவெழுத்து.

உகினம்

புளிமா.

உக்களவர்

இராக்காவலர்.

உக்காக்கம்

அரைநாண்.

உக்கிரகந்தை

ஓமம், வசம்பு.

உக்கிரச்சா

காத்தொட்டி.

உக்கிரச்சுரவார்

ஆதொண்டை.

உக்கிரமது

வைராக்கியமான குணம்.