உ - வரிசை 3 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உச்சவிருத்தி

ஒவ்வொரு நாளும் காலையில் இறைவனைப் பற்றிய பாடல்களைப் பாடியபடி வீடு வீடாகச் சென்று ஒரு செம்பில் அந்தந்த வீட்டார் இடும் அரிசி பருப்பு ஆகியவற்றைக் கொண்டு அன்றன்றைக்கு உண்டு வாழும் முறை

உட்கரு

1.(கதை முதலியவற்றின்)மிக ஆதாரமான பொருள் 2.அணுவில் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் கொண்டிருக்கும் மையப்பகுதி 3.உயிரணுவின் மையப்பகுதி

உட்கருத்து

(வெளிப்படையாகத் தெரியாத)நுட்பமான செய்தி

உட்காய்ச்சல்

தொட்டுப்பார்த்து அறிந்துகொள்ள முடியாமல் உடலில் இருக்கும் காய்ச்சல்

உட்கார்

இருத்தல்
இரு
அமர்தல்

உட்கிடக்கை

1.உட்கருத்து 2.உள்ளக்கிடக்கை

உட்கிடை

உட்கிடக்கை

உட்குழு

ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதும் முக்கியமான முடிவுகளை எடுக்கக்கூடியதுமான சிறு குழு

உட்கொள்

1.சாப்பிடுதல் 2.உறிஞ்சுதல் 3.(ஒன்று மற்றொன்றை உறுப்பாக)கொண்டிருத்தல்,அடக்கியிருத்தல்

உட்செலுத்து

(உள்ளீடற்ற பொருளில் துவாரம் முதலியவற்றில் ஒன்றை)நுழைத்தல்
(ஒன்றை)உள்ளே போகச் செய்தல்

உட்பக்கம்

உட்புறம், உள் பகுதி

உட்பகை

வெளிப்படையாகத் தெரியாத விரோதம்

உட்பட

'சேர்த்து' என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்
உள்ளாக

உட்படு

(ஒன்றின்)வரம்புக்குள் அல்லது எல்லைக்குள் அமைந்திருத்தல்
(வரைமுறை ,சட்டம் போன்றவற்றுக்கு ஒருவர் )கட்டுப்படுதல்
(ஒரு நிலைமைக்கு) ஆளாதல்

உட்படுத்து

(சோதனை ,ஆய்வு,கட்டுப்பாடு முதலியவற்றுக்கு) உள்ளாக்குதல்
(தண்டனை,தொல்லை போன்றவற்றை ஒருவர்)அனுபவிக்கும்படி செய்தல்

உட்பிரிவு

(பகுக்கப்பட்ட ஒரு பெரும் பிரிவின்)சிறு பிரிவு

உட்புகு

(திரவம் அல்லது ஒலி,ஒளி போன்றவை ஒன்றினுள்)செல்லுதல்
(ஒன்றின் வழியே)ஊடுருவுதல்
(திரவம், வாயு போன்றவை ஒன்றுக்குள்)கசிதல்

உட்புறம்

வெளிப்புறத்தின் மறுபுறம்,உள் பகுதி,உள்ளே இருக்கும் இடம்

உட்பூசல்

(ஒரு குழு,அமைப்பு போன்றவற்றின் உறிப்பினர்களுக்குள்)சொந்த நலனை முன்னிட்டு எழும் பூசல்

உட்பொருள்

வெளிப்படையாக அல்லது மேலோட்டமாகத் தெரியாத பொருள்,மறைபொருள்
உட்கருத்து