உ - வரிசை 29 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உன்னயம் | உயர்வு. |
உன்னலர் | பகைவர். |
உன்னியம் | அயிக்கம் |
உலூகம் | ஆந்தை, ஒருவகைக்கரை,கோட்டான். |
உதயன் | கதிரவன் |
உதன் | சிவன், கங்கை வேணியன் |
உதிட்டிரன் | தருமன் |
உதியன் | சேரன் |
உத்தானபாதன் | ஓர் அரசன் |
உபசுந்தன் | ஓர் அரசன் |
உருத்திரன் | சிவபிரான் |
உலகபாரணன் | திருமால் |
உபயம் | நன்றி |
உத்தரகிரியை | இறந்தவர்க்காகப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு : கருமாதி : காரியம். |
உவள் | முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123). |
உவ் | See உவை. |
உவை | உங்குள்ளவை. (திவ். திருவாய். 1,1,4.) |
உக்கிடு | நாணத்தைக்காட்டுங் குறிப்புச்சொல் |
உடோ | அடா. நேரே நின்றன்றோ உடோ பரிமாறுவது (ஈடு,4,8,2). |
உந்த | இங்கேயுள்ள. உந்தவேல் (பாரத. பதினான். 213). |