உ - வரிசை 28 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உவாந்தி | சத்தி. |
உவ்வு | தபம். |
உழமண் | அழுக்கெடுக்குமண். |
உழுந்து | உளுந்து |
உழுவம் | எறும்பு |
உளியம் | கரடி, இடம். |
உளுந்து | உழுந்து |
உளுவை | ஒருமீன். |
உள்ளங்கை | அகங்கை. |
உள்ளமுடையான் | ஒருசோதிடநூல். |
உள்ளியர் | அறிவுடையோர். |
உறுண்டுகம் | அவுலபாக்ஷாணம். |
உறுத்தை | அணில். |
உறையல் | பிணக்கு. |
உற்கடிதம் | பஞ்சதாளத்தொன்று. |
உற்கிருஷ்டம் | மிகுதி, மேன்மை. |
உற்பிரேட்சை | ஓரலங்காரம். |
உன்மத்தகி | குறிஞ்சா. |
உன்மானம் | நிறை, அளவு. |
உன்னதம் | உயர்ச்சி, மேன்மை. |