உ - வரிசை 27 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உலையிற்பிணந்தின்னி

மாமிசபேதி.

உலோசனம்

கண்.

உலோசிதம்

சந்தனமரம்.

உலோட்டம்

ஓடு.

உல்கு

ஆயம்
சுங்கவரி

உல்லங்கனம்

உல்லிங்கனம்.

உல்லியர்

கூவநூலோர்.

உல்லேகம்

உச்சரிப்பு ஓரலங்காரம்.

உல்லோசம்

மேற்கட்டி.

உவக்காண்

உங்கேபார். உவக்காண். வரிக்கச்சினனே (ஐங்குறு. 206).
அப்பொழுது, அவ்விடம் உங்கே.

உவச்சர்

ஓச்சர், சோனகர்.

உவட்டி

உவட்டிப்பு.

உவணி

வாள்.

உவண்

உவ்விடம்
மேலிடம்

உவமாநிலம்

சுவர்.

உவராகம்

கிரணகாலம்.

உவனி

வாள்.

உவன்

முன்நிற்பவன். பார்த்தானுவன் (பரிபா. 12, 55)
ஒருசுட்டுச்சொல்

உவாதி

உபாதி.

உவாத்தி

வாத்தி