உ - வரிசை 26 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உமாகடம் | சணற்கொத்து. |
உமாதசி | சணல். |
உம்பளம் | உபகாரம், கொடை வெகுமானம். |
உம்பி | உன் தம்பி |
உம்மாண்டி | வெருட்டுஞ்சொல். |
உய்மணல் | கருமணல். |
உருகம் | பிறப்பு. |
உருக்குமம் | பொன். |
உருத்திரோற்காரி | ஐம்பத் தேழாவதுவருடம். |
உருப்பிரமம் | ஆட்டுக்கொம்பு. |
உருவசி | உருப்பசி. |
உரூபகாரம் | அத்தாட்சி. |
உரோகதி | நாய். |
உரோங்கல் | உலக்கை. |
உரோசல் | உரைஞ்சல். |
உரோசி | சூரியகாந்தி. |
உலங்கு | கொசுகு, திரண்டகல். |
உலவம் | உலோபம். |
உலிற்கள் | வெண்கலம். |
உலைச்சல் | அலைவு, கலக்கம். |