உ - வரிசை 24 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உடம்பிடி | வேல். |
உடம்பை | கலங்கனீர். |
உடுவை | அகழ். |
உடைமானம் | உடை, புடவை. |
உடையார்பாளயம் | திருச்சியில்ஓருர். |
உணா | சோறு, உணவு. |
உண்டுகம் | பெருவாகைமரம். |
உதணம் | மொட்டம்பு. |
உதபாரம் | முகில். |
உதபானம் | கிணறு. |
உதரகோமதம் | பாலாடைப்பூண்டு. |
உதவகன் | தீ. |
உதள் | ஆடு, ஆட்டுக்கடா, மேடவிராசி. |
உதாவணி | கண்டங்காலி. |
உது | சேய்மைக்கும் அண்மைக்கும் மத்திமமானதைக் குறிக்கும் ஒரு சுட்டுப்பெயர். உதுக்காண் (யாப். வி. 94, பக். 356). |
உத்தண்டால் | உத்தண்டமணி. |
உத்தமசத்து | அவுபலபாஷாணம். |
உத்தாபலம் | இசங்கு. |
உத்தானி | ஒருநரம்பு. |
உத்தியுத்தர் | உரூபாரூபாசகள நிட்களர். |