உ - வரிசை 23 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உகுணம் | முகட்டுப்பூச்சி. |
உக்கா | கஞ்சாக்குடுக்கை, கள். |
உக்காரி | பிட்டு. |
உக்கிடர் | சிலந்திப்பூச்சி. |
உக்குளான் | சருகுமுயல். |
உங்கை | உன்மாதா, உன்றங்கை. |
உசிதன் | பாண்டியன். |
உசிர் | உயிர். |
உசு | உளு. |
உச்சட்டம் | இலக்கு, நேர். |
உச்சலம் | அறிவு, மனம். |
உச்சவம் | உற்சவம். |
உச்சாகம் | முயற்சி. |
உச்சிரதம் | பிரண்டை. |
உச்சுச்செனல் | நாயைக்கூப்பிடுதல். |
உச்சைச்சிரவம் | இந்திரன், குதிரை. |
உஞ்சட்டை | ஒஞ்சட்டை, மெலிவு. |
உஞ்சல் | ஊஞ்ஞசல். |
உஞ்சை | அவந்திநகர். |
உடம் | உடன். |