உ - வரிசை 22 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உலகப்பற்று | ஒருவர் தன் குடும்பத்தின் மீதும் தன் உடைமைகளின் மீதும் கொண்டிருக்கும் பிடிப்பு |
உலகப்போர் | பல நாடுகளுக்கு இடையே நடைபெறும், பெருத்த சேதத்தை உண்டாக்கும் போர் |
உலகம் | பூமி |
உலகமயமாக்கல் | உலகமயமாகும் போக்கு |
உலகமயமாகு | பன்னாட்டு நிறுவனங்களின் பாதிப்பாலும் பெருகி வரும் தொழில்நுட்பத்தினாலும் தொலைதொடர்பு வசதிகளாலும் உலக நாடுகள் ஒரே பொருளாதார அமைப்பாகவும் தடைகள் இல்லாத சந்தையாகவும் மாறிவருதல் |
உலகமயமாதல் | உலகமயமாகும் போக்கு |
உலக வங்கி | பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டி இல்லாமலோ குறைந்த வட்டியிலோ கடன் கொடுப்பதற்காக உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட வங்கி |
உலக வழக்கு | 1.பெரும்பாலனவர்கள் பின்பற்றும் வழக்கம் 2.மக்களிடையே பேச்சு மொழியில் வழங்கும் சொற்களின் ஆட்சி |
உலகாயதம் | 1.தூலப் பொருட்களே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்துக்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம் 2.பொருளும் பொருளைச் சம்பாதிப்பதும் முக்கியமானவை என்று கருதும் நடைமுறை வாழ்க்கை |
உலகியல் | இந்த உலகத்தில் அன்றாடச் செயல்பாடுகளைச் சார்ந்த நடைமுறை |
உலகு | உலகம் |
உலர் | (ஈரம்)காய்தல் |
உலர் உணவு | 1.(நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் வகையில்) காயவைத்து எளிதில் தயாரிக்கக் கூடிய உணவு 2.அரி ,பருப்பு ,சீனி போன்ற உணவுப் பொருள்களைக் குறிக்கும் பொதுப் பெயர் |
உலர் உணவு அட்டை | (அரிசி தவிர்த்து)மாவு ,சீனி, பருப்பு போன்றவற்றை நியாய விலைக் கடையில் வாங்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வழங்கும் அட்டை |
உகட்டு | உவட்டு. |
உகளம் | இஷ்டம், இரண்டு. |
உகா | ஒருமரம். |
உகாதி | அருகன், யுகாதி. |
உகிரம் | இலாமிச்சை. |
உகிர் | நகம். |