உ - வரிசை 21 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உருளை | நீள் உருண்டை வடிவம் அல்லது அவ்வடிவத்திலான பொருள் |
உருளைக்கிழங்கு | பழுப்பு நிற மெல்லிய தோலைக் கொண்ட ,உருண்டை வடிவக் கிழங்கு |
உருளைப் புழு | மனிதர்களின், விலங்குகளின் வயிற்றில் காணப்படும், மண்புழுவைப் போன்ற தோற்றம் உடைய, நோயைப் பரப்பும், ஒட்டுண்ணி வகையைச் சார்ந்த புழு |
உரை | தெரிவித்தல், கூறுதல் |
உரைக்கோவை | ஒரு பொருளைப் பற்றிய பலருடைய கட்டுரைத் தொகுப்பு |
உரைகல் | 1.(பொற்கொல்லர் தங்கத்தின் தரம் அறியத் தேய்த்துப் பார்க்கும்)கையடக்கமான கருமை நிறக் கல் 2.தரம் அறிவதற்கான உதாரணம் |
உரைகாரர் | உரையாசிரியர், (இலக்கிய இலக்கண, சமய நூல்களுக்கு) விளக்கம் எழுதும் ஆசிரியர் |
உரைநடை | (யாப்பில் அமையாத) இயல்பான எழுத்து மொழிநடை |
உரையாசிரியர் | (இலக்கிய இலக்கண, சமய நூல்களுக்கு) விளக்கம் எழுதும் ஆசிரியர் |
உரையாடல் | இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் தங்களிடையே இயல்பாகப் பேசிக்கொள்ளும் பேச்சு |
உரையாடு | இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் தங்களிடையே இயல்பாகப் பேசிக்கொள்ளுதல் |
உரோமம் | ரோமம், (மனித உடலில்) முடி, (மிருகங்களின்) மயிர் |
உல்லம் | (கடலில் இருந்து இனப்பெருக்கம் செய்வதற்காக ஆறுகளுக்கு வரும் ,சுமார் முக்கால் மீட்டர் நீளம் வரை வளரும், உணவாகும்) வெள்ளி நிற மீன் |
உல்லாசப்பயணம் | பார்க்கத் தகுந்த இடங்களுக்கு மேற்கொள்ளும்)மகிழ்ச்சியான பொழுதுபோக்குப் பயணம்; சுற்றுலா |
உல்லாசப்பயணி | உல்லாசப்பயணம் செல்பவர் |
உல்லாசம் | see உவகை |
உல்லு | தேங்காய்ப்பாரை |
உலக்கை | ஒரு முனை உருண்டையாகவும் மற்றொரு முனை தட்டையாகவும் பூணுடனும் இருக்கும் (தனியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும்)நீள் உருளை வடிவ மரச் சாதனம் |
உலக்கைக் கொழுந்து | மந்த புத்தி உள்ள நபர் |
உலகக் கோப்பை | ஒரு விளையாட்டில் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் அணிக்குத் தரும் கோப்பை அல்லது அப்படி நடைபெறும் போட்டித் தொடர் |