உ - வரிசை 20 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உருமறைப்பு

உள்ளிருப்பது வெளியே தெரியாதபடி ஏற்படுத்தப்படும் அமைப்பு

உருமால்

தலைப்பாகை
முண்டாசு
மேலாடை

உருவ அமைதி

(கதை, கவிதை, ஓவியம் போன்ற கலைப் படைப்புகளில்) வடிவ ஒழுங்கு

உருவ எழுத்து

சொற்களை ஒலிகளைச் சித்திர வடிவில் குறிக்கும் எழுத்து முறை

உருவகப்படுத்து

உருவகமாகக் கூறுதல்
இப்படித்தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று கற்பனையாகத் தீர்மானித்தல்

உருவகம்

உவமானத்தையும் உவமேஎயத்தையும் வேற்றுமைப்படுத்தாமல் ஒற்றுமைப் படுத்திக் கூறும் முறை

உருவகி

உருவகப்படுத்து

உருவடி

உருப்போடு

உருவப்படம்

ஒருவரின் முழு உருவத்தைக் காட்டும் பெரிய படம்

உருவ பொம்மை

கொடும்பாவி

உருவம்

(மனிதன் விலங்கு போன்றவற்றின்) வெளித்தோற்றம்
முழு உடல்
(மனித தெய்வ)வடிவத்தின் பிரதி அல்லது நகல்
நிழல் வடிவம்

உருவ வழிபாடு

கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறை

உருவாக்கு

அமைத்தல்
நிர்மாணித்தல்
தோற்றுவித்தல்
உண்டாக்குதல்
ஏற்படுத்துதல்

உருவாகு

தோன்றுதல்
உண்டாதல்
வெளிவருதல்
ஏற்படுதல்

உருவாடு

சாமியாடுதல்

உருவாரம்

ஐயனார் கோவிலில் நேர்த்திக் கடனாகச் செய்து நிறுத்தி வைக்கப்படும் உருவம்

உருவு

பலமாக இழுத்தல்
அழுத்தித் தடவுதல், பிடித்து நீவுதல்

உருவெடு

1.ஒன்று வேறொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல் 2.(வேறொரு)வடிவம் எடுத்தல்

உருள்

(படுத்த நிலையில்)பக்கவாட்டில் தொடர்ந்து ஒரே திசையில் மீண்டும் மீண்டும் புரண்டு நகர்தல்

உருளி

வாய் அகன்ற
உருண்டை வடிவ
உயரம் குறைந்த வெண்கலப் பாத்திரம்