உ - வரிசை 2 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உச்சாடனம்

(மந்திரங்களை)முறையாக ஓதுதல்

உச்சாணி

(மரத்தின்)உச்சி

உச்சி

1.(உயரமான ஒன்று) முடியும் இடம் 2.உச்சந்தலை 3.வகிடு 4.(புகழ்,செல்வாக்கு முதலியவற்றின்)உச்சம் 5.தலைக்கு நேர் மேலாக இருக்கும் வானத்தின் பகுதி

உச்சிக்கால பூசை

(கோவிலில் நாள்தோறும்)பகல் பன்னிரண்டு மணியளவில் நடக்கும் பூசை

உச்சிக்குடுமி

(ஆண்கள்)உச்சந்தலையின் பின் பகுதியில் நீளமாக வளர்த்து முடிந்து கொள்ளும் முடிக் கற்றை

உச்சிக்கொண்டை

(பெண்கள்)உச்சந்தலையின் பின்பகுதியில் கூந்தலை ஒன்று சேர்த்து முடிந்துகொள்ளும் ஒரு வகைக் கொண்டை

உச்சிக்கொள்

(ஒருவரை அல்லது ஒன்றை)முந்துதல்

உச்சிகுளிர்

(புகழ்ச்சியால்)பெரும் மனமகிழ்ச்சி ஏற்படுதல்

உச்சிநேரம்

உச்சிப்பொழுது

உச்சிப்பொழுது

தலைக்கு நேராக வானத்தில் சூரியன் வரும் நேரம்,நண்பகல்

உச்சிமாநாடு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் முக்கிய பிரச்சின குறித்து விவாதிப்பதற்காகக் கூடும் சந்திப்பு அல்லது தொடர்ச்சியான சந்திப்புகள்

உச்சிமுகர்

(அன்பை வெளிக்காட்டும் வகையில்)முன்னந்தலையில் முத்தமிடுதல்

உச்சிவானம்

தலையின் உச்சிக்கு மேலாக இருக்கும் வானம்

உச்சிவெயில்

நண்பகல் வெயில்

உசாத்துணை நூல்கள்

துணை நூற்பட்டியல்

உசாவு

1.கேட்டல், விசாரித்தல் 2.அளவளாவுதல்

உசிதம்

பொருத்தமானது,சரியானது,நிலைமைக்குத் தகுந்தது

உசிலி

வேகவைத்து அரைத்த பருப்போடு கொத்தவரங்காய்,பீன்ஸ்,வாழைப்பூ போன்ற காய்கறிகளில் ஏதாவது ஒன்று சேர்த்து தயாரிக்கும் தொடுகறி

உசுப்பு

1.(பாய்ந்து தாக்குமாறு)ஏவுதல் 2.உசுப்பேற்று 3.தூண்டுதல் 4.(தூக்கத்திலிருந்து)எழுப்புதல்

உசுப்பேற்று

தூண்டிவிடுதல்