உ - வரிசை 19 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உருட்டு

உருளச் செய்தல்
உருண்டு ஓடச் செய்தல்
வருத்து
இசை நரம்பை வருடு
ஆடம்பரமான பேச்சினால் மருட்டு [உருட்டுதல்]

உருட்டுக்கட்டை

ஒருவரைத் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும்(சுமார் முக்கால் மீட்டர் நீளம் உள்ள)பருமனான சவுக்குக் கட்டை

உருட்டுப்புரட்டு

(ஒருவர் தான் செய்யும் செயல் நிறைவேறக் கையாளும்) முறைகேடான வழிமுறை, பித்தலாட்டம்

உருண்ட

1.(தலை, முகம் போன்றவற்றைக் குறிக்கையில்) வட்ட வடிவமான 2.(தசைகளைக் குறிக்கும் போது) திரட்சியான

உருண்டு திரண்ட

மிகுந்த சதைப்பற்றுடன்

உருண்டை

கோள அல்லது குண்டு வடிவம்
(பொருள்)சிறு கோள வடிவில் இருப்பது அல்லது செய்யப்பட்டிருப்பது

உருத்தட்டு

உருப்போடு, பலமுறை படித்துப் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுதல், மனப்பாடம் செய்தல்

உருத்தாளன்

(நிலம் வீடு போன்றவற்றின் ) உரிமையாளர், சொந்தக்காரர்

உருத்தாளி

உரிமையாளர், சொந்தக்காரர்

உருத்திராட்சம்

(பெரும்பாலும் தீட்சை பெற்ற சைவர்கள்)மாலையாகக் கோத்து அணியவும், ஜெபமாலை செய்யவும் பயன்படும் உறுதியான கரும் பழுப்பு நிறக் கொட்டை/ அந்தக் கொட்டையைத் தரும் காய் காய்க்கும் மரம்

உருத்து

1.உறவு, சொந்தம் 2.அக்கறை

உருது

(இந்தியாவின் சில மாநிலங்களிலும் பாகிஸ்தானிலும் பேசப்படும்) பாரசீக மொழிச் சொற்கள் கலந்த, இந்தியோடு தொடர்புடைய ஒரு இந்தோ-ஆரிய மொழி
சேனை
பாசறை
வட இந்திய மொழிகளில் ஒன்று

உருப்படி

(எண்ணக் கூடிய) பொருள்
கிருதிகள், கீர்த்தனைகள் போன்ற இசை வடிவங்களைக் குறிக்கும் பொதுப்பெயர்

உருப்படியாக

1.(ஒருவருடைய) உயிருக்கு ஆபத்து இல்லாமல் 2.(ஒரு பொருள்) சேதம் அடையாமல் 3.ஒழுங்காக/ ஒழுங்கான

உருப்படு

(வாழ்க்கையில்)நல்ல நிலையை அடைதல்

உருப்பெருக்காடி

(பெரும்பாலும் கலைச்சொல்லாக)பொருளின் அளவைப் பெரிதாக்கிக் காட்டும் தன்மை கொண்ட குவியாடி

உருப்பெறு

உருவெடு, ஒன்று வேறொன்றாக மாறுதல் அல்லது வெளிப்படுதல்

உருப்போடு

பலமுறை படித்துப்படித்து நினைவில் வைத்துக்கொள்ளுதல்; மனப்பாடம் செய்தல்

உருபன்

(மொழியியலில்)பொருள் அடிப்படையில் மேலும் பிரிக்கப்பட முடியாத சொல் அல்லது சொல்லின் பகுதி

உருபு

பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வேற்றுமைப் பொருளையும் உவமைப் பொருளையும் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்