உ - வரிசை 18 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உரிமைப் பிரச்சினை | இந்திய அரசியல் சட்டத்தின்படி சட்டம் இயற்றும் (மக்களவை, மாநிலப் பேரவை போன்ற)பிரிவுக்குத் தரப்பட்டுள்ள உரிமை மீறப்படுகிறது என்று கருத இடமளிக்கும் பிரச்சினை |
உரிமையாளர் | (சொத்துக்கு, பொருளுக்கு) சொந்தக்காரர், (முதலீடு செய்து)தொழிலை நடத்துபவர் |
உரிமையியல் | சொத்துரிமை, சட்டத்துக்குப் புறம்பான இழப்பு போன்ற தனிநபர் உரிமை தொடர்பான சட்டத் துறை |
உரிய | 1.சொந்தமான, உரிமை உடைய 2.தகுந்த, பொருத்தமான |
உரு | (ஒன்றை இன்னது என்று தெரிந்து கொள்வதற்கு உரிய)புற (அடையாள)தோற்றம், புற வடிவ அமைப்பு |
உருக்கம் | (உள்ள) நெகிழ்ச்சி, உணர்ச்சி மயம் |
உருக்காலை | மிக அதிக வெப்ப நிலையில் உலோகத்தை உருக்கிக் கம்பி,தகடு போன்றவற்றைத் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை |
உருக்கு | (வெண்ணெய், உலோகம் போன்றவற்றை வெப்பத்தின் மூலம்)இளகச் செய்தல் |
உருக்குலை | நோய் கவலை போன்றவற்றால் மெலிந்து போதல் |
உருக்கொடு | உசுப்பேற்றுதல் |
உருக்கொள் | உருவாகுதல் |
உருகு | (வெண்ணெய் ,பனிக்கட்டி போன்றவை வெப்பத்தினால்)இளகுதல் |
உருகுநிலை | ஒரு திடப்பொருள் திரவ நிலைக்கு மாறத் தொடங்கும் வெப்ப நிலை |
உருட்சிதிரட்சி | சதைப்பற்றோடு திடமாக/ சதைப்பற்றோடு திடமான |
உருட்டச்சு | உண்டாக்கும் துளை வடிவாக மையச் செலுத்திப் பிரதிகள் எடுக்கும் முறை |
உருட்டல் மிரட்டல் | (முகத்தில் கோபம்,கடுமை போன்றவை வெளிப்பட பலமாக அதட்டி)பயமுறுத்துதல் |
உருட்டாலை | பழுக்கக் காய்ச்சுதல், அமிலத்தில் நனைத்தல் ஆகிய முறைகளின் மூலம் இரும்பு உருளைகளிலிருந்து)கட்டடம் கட்ட பயன்படும் கம்பிகளைத் தயாரிக்கும் தொழிற்சாலை |
உருட்டித்திரட்டி | (பணம் பொருள் முதலியவற்றை)இயன்ற வழிகளிலெல்லாம் சேர்த்து |
உருட்டிப்புரட்டி | (ஒரு செயல் நிறைவேறத் தனக்குத் தெரிந்த )எல்லா விதமான வழிகளையும் உபாயங்களையும் கையாண்டு |
உருட்டிமிரட்டி | (ஒருவரைத் தனக்கு அடிபணியவைக்கும் நோக்கத்தோடு)அதட்டியும் மிரட்டியும் |