உ - வரிசை 16 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உயிர் வேதியியல் | உயிர்வாழ்வனவற்றில் இருக்கும் பொருள்களின் வேதியியல் தன்மைகளை ஆராயும் அறிவியல் துறை |
உயிர்வேலி | (கழி,கம்பி போன்றவற்றைப் பயன்படுத்தாமல்) அடர்த்தியாக வலரும் மரப் போத்துகளை நட்டு உருவாக்கும் வேலி |
உயிரணு | உயிரினங்களின் இயக்கத்திற்கும் உடல் அமைப்பிற்கும் அடிப்படையான, கண்ணுக்குப் புலப்படாத மிக நுண்ணிய கூறு |
உயிரி | 1.உயிரினம் 2.நுண்ணுயிர் |
உயிரி ஆயுதம் | பேரழிவை ஏற்படுத்தும் சக்தி படைத்த(ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் ) பாக்டீரியாக்கள் |
உயிரி தொழில்நுட்பம் | நுண்ணுயிர்களையும் மரபணுக்களையும் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பம் |
உயிரியல் | உயிர் வாழ்வன பற்றிய அறிவியல் |
உயிரியல் பூங்கா | விலங்குகளும் பறவைகளும் தம்முடைய இயற்கையான சூழலில் வாழ்வது போலவே இருக்கும் வகையில் பெரிய நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட மிருக காட்சிச் சாலை |
உயிரினம் | உயிருள்ளவை அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர் |
உயிருக்கு உயிராக | மிகுந்த அன்போடு |
உயிரூட்டு | புது வேகம் அல்லது எழுச்சி தருதல் |
உயிரெழுத்து | உயிர் |
உயிரைக் குடி | (ஒருவருடைய)உயிர் போகக் காரணமாக இருத்தல் |
உயிரைக்கொடுத்து | மிகுந்த ஈடுபாட்டுடன் தன்னால் இயன்றது அனைத்தையும் செய்து |
உயிரை விட்டு | (ஒருவர்)முழு சக்தியையும் பயன்படுத்தி, கடுமையாக உழைத்து |
உயிரோட்டம் | (கதை ஓவியம் முதலியவற்றுக்கு)உணர்ச்சி தரும் அம்சம் |
உயில் | (இறப்பதற்குள் மாற்றி எழுதக்கூடியதாக அமையும் முறையில்) ஒருவர் தன் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய சொத்துக்கள் இன்னாரைச் சேர வேண்டும் என்று தன் விருப்பத்தின் பேரில் எழுதும் சட்டபூர்வமான பத்திரம் |
உரக்க | (பேசுதல்,சிரித்தல்,படித்தல் போன்ற செயல்களில்)குரல் ஒலி அதிகரிக்கும் வகையில், அதிக சப்தத்துடன் |
உரசல் | (ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததால் ஏற்படும்)சிறு சச்சரவு, மனத்தாங்கல் |
உரசு | உராய்தல் |