உ - வரிசை 15 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
உயிர்காத்தல்

ஆபத்திலிருந்து காத்தல், வாழ வைத்தல்

உயிர்கொடு

(அழிந்துவிடும் நிலையிலுள்ள ஒன்றுக்கு)புத்துயிர் அளித்தல், உயிர்ப்பித்தல்

உயிர்ச்சத்து

உடல் வளர்ச்சி, ஆகியவற்றுக்கு அவசியமானதும் சில வகை உணவுப் பொருள்களில் காணப்படுவதுமான பல வகைச் சத்துப் பொருள்

உயிர்ச்சேதம்

(விபத்து போன்றவற்றில் மனிதன்,விலங்கு ஆகியவற்றின்)இறப்பு

உயிர்த்துடிப்பு

1.உடலில் உயிர் இருப்பதை உணர்த்தும் அசைவு,இதயத்துடிப்பு 2.ஒன்றைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆர்வம்

உயிர்த்தெழு

1.செயல்படத் தொடங்குதல் 2.மீண்டும் உயிர்பெறுதல்

உயிர்தப்பு

உயிர்பிழைத்தல்

உயிர்தரி

உயிரோடு இருத்தல்

உயிர்நாடி

(ஒன்று)நிலைப்பதற்கு ஆதாரமானது

உயிர்நிலை

உயிர்நாடி

உயிர்ப்பி

(வழக்கற்றுப்போன ஒன்றை)மீண்டும் வழக்குக்குக் கொண்டு வருதல், புதிப்பித்தல்

உயிர்ப்பிச்சை

(சாவது உறுதி என்ற நிலையிலிருந்து) மீண்டும் பெறும் வாழ்வு, உயிர் நிலைத்தல்

உயிர்ப்பு

உயிர் இருப்பதை வெளிப்படுத்தும் மூச்சு இயக்கம் முதலியன

உயிர்ப் பூச்சிக்கொல்லி

உயிரிப் பூச்சிக்கொல்லி, வேதியியல் பொருள்களின் கலப்பு இல்லாமல் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்து

உயிர்பிழை

மரணத்திலிருந்து தப்பித்தல்

உயிர்பெறு

உயிரோட்டம் பெறுதல்

உயிர்மெய்

மெய்யெழுத்து முன்னும் உயிரெழுத்து பின்னுமாக இணைந்து நின்று ஒலிக்கும் ஒலி/ஒற்றெழுத்தும் உயிரெழுத்தும் இணைந்தொலிக்கும் எழுத்து

உயிர்வாழ்

உயிரோடிருத்தல்

உயிர்விடு

1.(தீவிரமாக நம்பும் கொள்கைக்காக)உயிரை இழத்தல், இறத்தல் 2.(குறிப்பிட்ட) ஒன்றுக்காகவே வாழ்க்கையை வாழ்தல்

உயிர்வேதிப்பொருள்

உயிரினங்களின் உடலில் இருக்கும் அல்லது உற்பத்தியாகும் வேதிப்பொருள்