உ - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உயர்ந்தபட்சம் | அதிக அளவு |
உயர்ந்தோங்கு | (வாழ்க்கை, தொழில் போன்றவற்றில்)சிறப்பான நிலையை அடைதல் |
உயர்நிலை | மேல்நிலை |
உயர்நிலைக் கல்வி | பத்தாம் வகுப்புவரை பயிலும் கல்வி |
உயர்நிலைப் பள்ளி | பத்தாம் வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம் |
உயர் நீதிமன்றம் | (இந்தியாவில்)மாநிலங்களுக்கான தலைமை நீதிமன்றம் |
உயர்மட்டக்குழு | குறிப்பிட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்து ச்றிக்கை அளிக்கும் பொருட்டு அரசால் நியமிக்கப்படும் குழு |
உயர்விளைச்சல் ரகம் | வீரிய விதைகள், ரசாயன உரங்கள், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் குறுகிய காலச் சாகுபடி போன்றவற்றை உள்ளடக்கிய அதிக மகசூல் தரும் பயிர் ரகம் |
உயர்வு | (அளவு, விலை, மதிப்பு போன்றவற்றில்) அதிகரிப்பு, கூடுதல் |
உயர்வு மனப்பான்மை | மற்றவர்களைவிடத் தான் எல்லா வகையிலும் உயர்வு என்ற மனப்போக்கு |
உயர | உயரே, மேலே, மேல்நோக்கி |
உயரம் | (ஒருவரின் அல்லது ஒன்றின்)அடிப்பகுதியிலிருந்து மேல் பகுதிவரை உள்ள அளவு |
உயரம் தாண்டுதல் | ஓடி வந்து அதிக உயரம் தாண்டும் தடகளப் போட்டி |
உயரிய | உயர்ந்த ,சிறந்த |
உயரே | மேலே,மேல்நோக்கி |
உயவு எண்ணெய் | (இயந்திரத்தின் பாகங்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதைத் தடுக்கவும் இயந்திரம் சீராக இயங்கவும் பயன்படுத்தப்படும்) பசைத் தன்மையும் குழகுழப்பும் நிறைந்த பொருள் |
உயிர் | (மனிதன்,விலங்கு, தாவரம் ஆகியவற்றின் எல்லா இயக்கங்களுக்கும்)ஆதாரமாய் இருக்கும் சக்தி, ஜீவன் |
உயிர் இயற்பியல் | இயற்பியல் விதிமுறைகளைப் பயன்படுத்தி உயிரியலை ஆராயும் அறிவியல் துறை |
உயிர் உரம் | காற்று மண்டலத்தில் கானப்படும் தழைச்சத்தை ஈர்த்துப் பயிர்களுக்குப் பயன்படும் வகையில் மாற்றிக் கொடுக்கும் நுண்ணுயிரிகள் |
உயிர்க்கோழி | (இறைச்சிக்காக)உயிரோடு விற்கப்படும் கோழி |