உ - வரிசை 13 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உமிச்சட்டி | உமியோடு, கணப்பு போடுவதற்கான சிறிய மண் சட்டி |
உமிழ் | துப்புதல் |
உமிழ்நீர் | வாயில் சுரக்கும் நீர், எச்சில் |
உமிழ்வு | (ஒரு பொருள் ஒளியையோ கதிர்வீச்சையோ வெப்பத்தையோ)வெளிப்படுத்தும் நிலை |
உமை | பார்வதி |
உய் | (தீவினையிலிருந்து நீங்கி)நற்கதி அடைதல் |
உய்த்தறி | உய்த்துணர், (கூறப்பட்டதிலிருந்து கூறப்படாததை) ஆராய்ந்து அறிதல் |
உய்வி | உய்வடையச் செய்தல் |
உய்வு | (தீவினையிலிருந்து நீங்கிப் பெறும்)நற்கதி |
உயர் | (ஒன்று தன் நிலையிலிருந்து) மேல் நோக்கி ந்ழும்புதல் |
உயர் அழுத்த மின்சாரம் | (தொழிற்சாலைகளில் பெரிய இயந்திரங்கலை இயக்கத் தேவையான)சக்தி வாய்ந்த மின்சாரம் |
உயர் இரத்த அழுத்தம் | இயல்பான அலவுக்கும் அதிகமாக இருக்கும் இரத்த அழுத்தம், இரத்தக் கொதிப்பு |
உயர்கல்வி | (பள்ளிக் கல்விக்கு அடுத்த)மேற்படிப்பு |
உயர்ச்சி | உயர்வு |
உயர்த்திப்பிடி | முக்கியத்துவம் தருதல் |
உயர்த்து | (உடல் உறுப்புகளை) கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குக் கொண்டு போதல் |
உயர்தரம் | (பட்டப் படிப்பில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதியாக அமையும்) மேல்நிலைத் தேர்வு |
உயர்திணை | மனிதரையும் தெய்வங்கலையும் உள்ளடக்கிய பெயர்ச்சொல் பகுப்பு |
உயர் தொழில்நுட்பம் | மின்னணுவியல், கணிப்பொறியியல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் |
உயர்ந்த | உயரமான |