உ - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உபதேசி | அறிவுறுத்துதல் |
உபநதி | பெரிய ஆற்றில் வந்து கலக்கும் சிறிய ஆறு |
உபயோகப்படு | பயனுள்ளதாக இருத்தல், பயன்படுதல் |
உபயோகப்படுத்து | பயன்படுத்துதல் |
உபயோகம் | பயன் |
உபயோகி | (தேவையை, நோக்கத்தை நிறைவேற்ற ஒன்றை)பயன்படுத்துதல் |
உபரி | see மிகை |
உபவாசம் | உண்ணாமல் இருக்கும் நோன்பு, விரதம் |
உபன்யாசம் | இடையிடையே பாட்டுக்கள் பாடி நிகழ்த்தும் சமயச் சொற்பொழிவு |
உபாசகன் | (பொதுவாக பெண் தெய்வத்தை) தீவிரப் பக்தியுடன் வழிபடுபவன் |
உபாசனை | தீவிரமான வழிபாடு |
உபாசி | (பெரும்பாலும் பெண் தெய்வத்தை)தீவிரமாக வழிபடுதல் |
உபத்தியாயர் | (கல்வி,கலை கற்பிக்கும்)ஆசிரியர் |
உபாதை | 1.(வலி , நோய் போன்றவற்றால் ஏற்படும்)அசௌகரியம் 2.தொல்லை |
உபாயம் | வழி |
உபாயம் | சாமம்,தானம்,பேதம்,தண்டம் |
உம்மணாமூஞ்சி | கலகலப்பாக இல்லாத ஆள், சிரித்த முகத்துடன் இல்லாதவர் |
உம்மைத்தொகை | இணைத்துத் தொடர்புபடுத்தும் 'உம்' என்னும் இடைச்சொல் இல்லாத பெயர்ச்சொற்களால் ஆன கூட்டுச்சொல் |
உமல் | பனையோலையால் பின்னப்பட்ட பைபோல இருப்பது |
உமி | (தானியங்களில் இருந்து நீக்கப்பட்ட)புறத்தோல் |