உ - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உப்புக்காற்று | கடலிலிருந்து வீசும் உப்புத் தன்மை நிறைந்த காற்று |
உப்புச் சத்தியாக்கிரகம் | இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உப்புக்கு ஆங்கிலேய அரசு விதித்த வரியை எதிர்த்து காந்தி தலைமையில் நடத்தப்பட்ட போராட்டம் |
உப்புசம் | 1.வயிறு உப்பியிருப்பதைப் போன்ற உணர்வு 2.(வாயுக்கோலாறு ,அஜீரணம் போன்றவற்றால்) வயிற்றில் ஏற்படும் மந்த நிலை |
உப்புநீர் | குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாத உப்புத் தன்மை அதிகமாக உள்ள நீர் |
உப்புப்பூ | (வியர்வை காய்ந்து தோலின் மீது)உப்புப் படிந்து வெள்ளை வெள்ளையாகக் காணப்படுதல் |
உப்புப் பெறாத | எந்த முக்கியத்துவமும் தரப்படத் தேவையில்லாத |
உப்புமா | அரிசி அல்லது ரவையை வேகவைத்துச் செய்யும் ஒரு சிற்றுண்டி |
உப | முக்கிய பகுதியாக அமையாதது, துணை, கிளை |
உப உணவு | சாமை, கம்பு, வரகு போன்ற சிறுதானியங்கள் |
உபகரணம் | see துணைக்கருவி |
உபகாரச் சம்பளம் | உதவித் தொகை |
உபகாரம் | (ஒருவருக்குச் செய்யும்) உதவி |
உபகாரி | உதவுபவர், நன்மை செய்பவர் |
உபசரணை | 1.உபசாரம், உபசரிப்பு 2.முறை கருதிச் செய்யப்படும் செயல் |
உபசரி | (விருந்தாளிகளை )வரவேற்று (மரியாதையுடன்)கவனித்துத் தேவையானவற்றைச் செய்தல் |
உபசரிப்பு | (வீட்டுக்கு வருபவர்களுக்குக் காட்டும் )வரவேற்பும் கவனிப்பும் |
உபசாரம் | see பணிவிடை. |
உபசாரம் | தாம்பூலம் அளித்தல் |
உபத்திரவம் | (வேலைக்கு அல்லது நிம்மதிக்கு ஏற்படும்)இடைஞ்சல் |
உபதேசம் | அறிவுரை |