உ - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உதைப்பு | (தவறு செய்திருக்கும்போது)உள்ளூர ஏற்படும் மனக்கலக்கம், உதறல் |
உதைபந்து | கால்பந்து |
உந்தம் | உந்து விசையால் ஏற்படும் (ஒரு பொருளின் நிறையையும் அதன் திசை வேகத்தையும் பெருக்கினால் கிடைக்கும்) இயக்கம் |
உந்தல் | உந்துதல்,தூண்டுதல், ஊக்கம் |
உந்தி | தொப்புள் |
உந்து | (முன்னோக்கி வேகமாக நகர்வதற்கு வசதியாகத் தரையில்)முன் காலால் அழுத்துதல் |
உந்துசக்தி | உந்துவிசை, ஒரு பொருள் முன்னோக்கிச் செல்ல அல்லது பாயத் தேவையான வேகத்தைத் தரும் சக்தி |
உந்துதல் | தூண்டுதல்,ஊக்கம் |
உந்து பலகை | (நீச்சல் குளத்தில் குதிப்பதற்கு முன்)உந்தி மேலெளுவதற்கு உதவும் வலுவான நீண்ட பலகை |
உப்பங்கழி | கடலிலிருந்து பிரிந்து கடல் நீர் தேங்கியிருக்கும் மணல் மேடு |
உப்பட்டி | (வயலில் அறுத்த) நெற்கதிர்களின் கட்டு |
உப்பரிகை | (அரண்மனை போன்றவற்றில்) மேல்மாடம் |
உப்பளம் | பாத்திகளில் தேக்கப்பட்ட கடல் நீர் ஆவியாகி உப்பு படிவதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட இடம் |
உப்பீனி | கார உலோகங்களுடன் இணைந்து உப்புகளைத் தரும் தனிமங்கள் |
உப்பு | கைப்புச் சுவையுடையதும் உணவிற்குப் பயன்படுவதுமான வெள்ளை நிறப் படிகப் பொருள் |
உப்பு | இந்துப்பு |
உப்புக் கடலை | உப்பும் மஞ்சள் பொடியும் தூவி வறுத்த கொண்டைக் கடலை |
உப்புக் கண்டம் | 1.உப்பிட்டுக் காயவைத்துப் பதப்படுத்திய இறைச்சி 2.கருவாடு |
உப்புக்கரி | உப்புச் சுவை அதிகமாக இருத்தல் |
உப்புக்காகிதம் | உப்புத் தாள், (ஒரு பரப்பைத் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும்) ஒருவகைத் தாதுவின் துகள்கள் ஒரு பக்கத்தில் ஒட்டப்பட்ட சொரசொரப்பான காகிதம் |