உ - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
உடையார் | செல்வர் |
உக்கல் | உளுத்துப்போனது |
உக்கிரம் | கடுமை |
உக்கிராணம் | (பெரும்பாலும் கோயில் ,மடம் போன்றவற்றில்)சமையலுக்கு வேண்டிய பொருள்களை வைத்திருக்கும் அறை |
உக்கு | (மரம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட பொருள் )உளுத்தல் |
உக்குட்டி | மிகச் சிறியது |
உக்குறுணி | மிகவும் சிறியது |
உகந்த | 1.பொருத்தமான ,ஏற்ற 2.(நினைத்ததற்கு ஏற்ற,விருப்பமான |
உகப்பு | உவப்பு, மனதுக்குப் பிடித்தது |
உகு | (கண்ணீர்)வடித்தல்,சிந்துதல்,உதிர்த்தல் |
உங்கள் | 'நீங்கள்' என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது திரியும் வடிவம் |
உச்சக்கட்டம் | (கதை திரைப்படம் போன்றவற்றில் )பெரும்பாலும் முடிவுக்கு முன்னால் வரும் பரபரப்பூட்டும் திருப்பமாக அமையும் முக்கியமான பகுதி |
உச்சக்கொப்பில் இரு | (உணர்வு ,நிலை போன்றவை)உச்சத்தில் இருத்தல் |
உச்சந்தலை | (மனிதர்களில்)மேல் தலையின் நடுப்பகுதி |
உச்ச நீதிமன்றம் | (இந்தியாவில்) நாடு முழுமைக்குமான தலைமை நீதிமன்றம் |
உச்சம் | தீவிரம் அல்லது அதிகப்பட்ச அலவு, மிக உயர்ந்த நிலை,தீவிரமான நிலை |
உச்சமட்டம் | (பல நிலைகளைக் கொண்ட அமைப்பில்)இறுதி,மேல்மட்டம்,உயர்நிலை |
உச்சரி | (எழுத்தை சொல்லை)ஒலித்தல் |
உச்சரிப்பு | (எழுத்தின் ,சொல்லின்) ஒலிப்பு முறை |
உச்சவரம்பு | (காலம்,அலவு குறித்து வரும்போது)வரையறுக்கப்பட்ட உயர் எல்லை |